மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் பிசாசு-2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2014-ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, நமீதா கிரிஷ்ணமுர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Glad to announce about the resuming of #Pisasu2 starring @andrea_jeremiah directed by @DirectorMysskin We are happy to be on floors following the new norms for safety. @kbsriram16 @Lv_Sri @APVMaran @santhakumar_dop @teamaimpr pic.twitter.com/0cC6kALs1t
— RockFort Entertainment (@Rockfortent) July 22, 2021
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பிசாசு-2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தற்போது திண்டுக்கல்லில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.