Categories
சினிமா தமிழ் சினிமா

மிஷ்கினின் ‘பிசாசு -2’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பிரபல நடிகை…!!!

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு-2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, ராஜ்குமார் பிட்சுமணி, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

director mysskin pisasu 2 movie shooting update

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார் . இந்நிலையில் பிசாசு-2 படத்தின் படப்பிடிப்பு இறுதி நாளை எட்டிவிட்டதாக நடிகை பூர்ணா தனது சமூக வலைதள பக்கத்தில்  தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |