Categories
சினிமா தமிழ் சினிமா

மிஷ்கினின் ‘பிசாசு 2’… ஸ்பெஷல் போஸ்டரில் இருந்த ரகசியம்… என்ன தெரியுமா?…!!!

இயக்குனர் மிஷ்கினின் பிசாசு -2 திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 இல் வெளியான திரைப்படம் ‘பிசாசு’ . இந்தப் படத்தில் நாகா, ராதாரவி, பிரியகா மார்டின் ஆகியோர் நடித்திருந்தனர் . சமீபத்தில் ‘பிசாசு -2’ தயாராவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது . இதையடுத்து இயக்குனர் மிஷ்கின் பிசாசு-2 படத்தை பூஜையுடன் தொடங்கினார்.

மிஷ்கின் பிசாசு 2 போஸ்டர் ரகசியம் | Mysskin andrea's pisasu 2 poster secret revealed

நேற்று ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பிசாசு-2’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை மிஷ்கின் வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்நிலையில் அந்த போஸ்டர் குறித்த ரகசிய தகவல் கசிந்துள்ளது. அதாவது அந்த போஸ்டரில் ஆண்ட்ரியா கொடுத்துள்ள போஸ் அவரது பாட்டியின் புகைப்படத்தை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. நடிகை ஆண்ட்ரியா 2015 ஆம் ஆண்டில் இதே புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவரது பாட்டியின் தோற்றத்தை வைத்து ஆண்ட்ரியாவின் லுக்கை வடிவமைத்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |