Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பறிவாளன்…மிஸ்கின் இல்லை…ரசிகர் கேட்ட கேள்விக்கு பிரசன்னா விளக்கம்..!!

துப்பறிவாளன் பாகம் 2ல் மிஷ்கின் இல்லாமல் திரைப்படம் எப்படி இருக்கும் என்று கேட்ட ரசிகரின் கேள்விக்கு  நடிகர் பிரசன்னா பதில் அளித்தார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில்துப்பறிவாளன் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் விஷால், பிரசன்னா மற்றும் வினய் நடித்திருந்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை  எடுப்பதற்கு தயாராகி உள்ளனர்.

தற்போது திரைப்படத்தின்  இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் இணைந்து ரகுமான், கவுதமி ஆகியோர் நடித்த முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து விஷாலுக்கும், இயக்குனர் மிஸ்கினுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக திரைப்படத்திலிருந்து இயக்குனர் மிஸ்கின் நீக்கப்பட்டுள்ளார்.

மீதி படத்தை நடிகர் விஷால் இயக்குவதாகவும் உள்ளார். இந்த நிலையில் துப்பறிவாளன் படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்துள்ள பிரசன்னாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். மிஸ்கின் இல்லாமல் இத்திரைப்படம் எப்படி இருக்கும் என கேட்டார். அதற்கு பிரசன்னா பதில் அளித்தார், துரதிஸ்டவசமாக இந்தப்படத்தில் மிஸ்கின் இல்லை அதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன் என்றும் அதே நேரம் நடிகர் விஷால் முழு படமாக  சிறப்பானதாகவே கொடுப்பார் என நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

 

Categories

Tech |