மிஸ் இந்தியா அழகி போட்டிக்கு குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அளவில் மிஸ் இந்தியா அழகி போட்டி நடத்தப்படுகின்றது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக மாநில அளவிலான அழகி போட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வின்னர் ரன்னர் என்ற அடிப்படையில் மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றார்கள்.
அதில் மிஸ் தமிழ்நாடு ரன்னர் பட்டத்தை கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தளவாய்புரத்தைச் சேர்ந்த நிஜோதா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வருகின்றார். இந்த போட்டி மூலம் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு வின்னர் மற்றும் ரன்னர் தேர்வு செய்யப்பட்டு டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான அழகி போட்டியில் கலந்து கொள்வார்கள். இது பற்றி மாணவி நிஜோதா கூறியுள்ளதாவது, தேசிய அளவில் இடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன் என கூறியுள்ளார்.