தமிழகத்தில் திருவண்ணாமலையில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கவிதா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் டுவிட்டரில் பகிர்ந்து வரும் பதிவுகள் அனைத்தையும் நெட்டிசன்களை கவர்ந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் கவிதா ஆசிரியரின் பதிவுகளை ரீட்விட் செய்யாமல் போவது இல்லை. கவிதா ஆசிரியரின் வகுப்பில் ஒரு சிறுமி, மிஸ் உங்க சேரில் உட்காரலாமா என்று கேட்டதாகவும், அதற்கு உங்களுக்கு இல்லாத சேரா உட்கார்ந்துக்க்கோ என்று கூறி சிறுமியை அவரது சேரில் உட்கார வைத்து எடுத்த போட்டோவை வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து கவிதா ஆசிரியர் பற்றி மேலும் தெரிந்து கொள்ள அவரது பழைய பதிவுகளை ஆராய்ந்ததில், ஆசிரியர் கவிதா கொரோனா காலகட்டத்தில் சந்தித்து வரும் போராட்டம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. அந்தப் பதிவில் கவிதா ஆசிரியர் நிதியுதவி தொடக்கப்பள்ளியில் 2012 முதல் பணி புரிந்துவரும் கவிதாவிற்கு கடந்த 2019 மே மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் அது தனது வாழ்வாதாரத்தை காப்பதற்காக விசாரித்து எனக்காக நிதியை பெற உதவுங்கள் என்று தொடர்ச்சியாக முதல்வர் ஸ்டாலினுக்கு டேக் செய்து கோரிக்கை வைத்து வருகிறார்.
இதையடுத்து தனக்கு ஊதியம் கிடைத்திராத என்று கவலையில் இருந்தாலும் வகுப்பில் சிறுவர் சிறுமியர்களிடம் தொடர்ந்து தனது அன்பை வெளிப்படுத்தி வருகிறார். கவிதா ஆசிரியர் எப்போதும் குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்வதால் குழந்தைகள் கவிதா ஆசிரியருக்கு அவர்கள் வரைந்த ஓவியதை பரிசாக கொடுக்கின்றனர். அந்தப் பரிசை கவிதா ஆசிரியர் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். மேலும் குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி வரும் கவிதா ஆசிரியரின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்படுகிறது.