ஜெர்மனில் மாறுபட்ட வகையில் நடத்தப்பட்ட அழகி போட்டியில் “மிஸ் ஜெர்மனி 2021” என்ற பட்டத்தை இரண்டு குழந்தைகளின் தாயான 33 வயது பெண் பெற்றுள்ளார்.
ஜெர்மனில் வித்தியாசமாக, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு “Empowering Authentic Women” என்ற தலைப்பில் அழகிப் போட்டி நடைபெற்றது. பொதுவாக அழகி போட்டி என்றாலே ஆடைகள் அரைகுறையாக அணிந்துகொண்டு அழகான தோற்றத்துடன் கலந்துகொள்பவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும்.
ஆனால் இந்த போட்டி அவ்வாறு இல்லாமல் பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் தனித்துவம் மிகுந்த ஆளுமைத் திறன்களை மதிப்பிடும் வகையில் நடைபெற்றுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதில் Anja Kallenbach என்ற 33 வயதுடைய பெண் பட்டம் வென்றிருக்கிறார். இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆவார். மேலும் இவர் Miss Thuringiya என்ற உள்ளூர் அழகிப் போட்டியில் ஏற்கனவே பட்டம் வென்றிருக்கிறார்.