Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மிஸ் பண்ணாதீங்க… லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம்… பிரசித்தி பெற்ற கோவில்….!!

குருபெயர்ச்சி லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 2 கிராம் வெள்ளி நாணயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற  ஆபத்சகாயேஸ்வரர்  திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

இந்நிலையில் குரு பகவானுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை முதல் கட்ட லட்சார்ச்சனையும், குரு பெயர்ச்சிக்கு பின்னர் ஏப்ரல் 14-ஆம்  தேதி முதல் 22-ஆம்  தேதி வரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும்  நடைபெறுகிறது. இந்த பூஜையில் மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம், ஆகிய ராசிக்காரர்கள் கலந்துகொண்டு பரிகாரம் செய்யலாம் எனவும் கூறியுள்ளனர். மேலும் இந்த லட்சார்ச்சனையில் கலந்து கொள்பவர்களுக்கு 400 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இந்த பூஜை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும்,மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடைபெறுகிறது. எனவே  பூஜையில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் உள்ளிட்ட முழு விவரங்களுடன் தொகையை ஆபத்சகாயேஸ்வரர்  கோவில் என்ற பெயருக்கு வரையோலை எடுத்து கோவில் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளனர்.

Categories

Tech |