அரசு ஊழியர்கள் கல்வி படித்தொகை பெறுவதற்கு இம்மாத இறுதியே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற முடியாமல் இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி படித்தொகை கிளைம் செய்ய மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.
கல்வி உதவித்தொகை கிளைம் செய்ய குழந்தையின் பள்ளி சான்றிதழ் பெற வேண்டும். அதில் உங்கள் குழந்தை அந்த பள்ளியில் படிப்பதாக பள்ளி நிர்வாகம் சான்றிதழ் அளிக்க வேண்டும். மேலும் இது போக குழந்தையின் ரிப்போர்ட் கார்டு, கட்டண ரசீது ஆவணங்களும் வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு குழந்தை படித்தொகை மாதம் 2,250 ரூபாய் வழங்கப்படுகிறது. இரண்டு குழந்தைகள் வரை மொத்தம் 4,500 ரூபாய் உதவித் தொகை பெறலாம். இந்த தொகையை பெறுவதற்கு கடைசி நாள் இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது. எனவே கடைசி நாளுக்குள் ஆவணங்களை சமர்ப்பித்தால் சம்பளத்துடன் கல்வி உதவித் தொகையும் சேர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.