பத்திர பதிவுகள், கல்வி சான்று பெறுதல், மத்திய, மாநில அரசுகளின் பெரும்பாலான சேவைகள் மற்றும் சமூகநல திட்ட பயன்களை பெறுதல் உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் எண் முக்கிய பங்காற்றுகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஆதார் பதிவு மையங்கள் 1,400-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் அவ்வப்போது சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் வரும் 27-ஆம் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் கீழ்க்காணும் சேவைகளை பெற முடியும் :-
* முகவரி மாற்றம்
* புதியதாக ஆதார் எடுத்தல் ( கட்டணம் இல்லை )
* பெயர் மாற்றம்
* பிறந்த தேதி மாற்றம்
* அலைபேசி எண் இணைத்தல்
* புகைப்படம் மாற்றம் செய்தல்
* பயோமெட்ரிக் அப்டேட்
* மின்னஞ்சல் இணைத்தல்
* ஆதார் அட்டை காணாமல் போனால் அதனை மீண்டும் பெறுவதற்கு விண்ணப்பம்.