Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க… மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்… 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்…!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அங்கு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளது.  இந்த முகாமில் பல்வேறு பணிகளுக்கு என 50,000 க்கும்  மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. பணிக்கு தகுதி மற்றும் திறமையான நபர் விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றார்கள்.

Private empolyment camp கல்வித்தகுதிகள்;

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள், முகாமில் கலந்து கொள்ள தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் / பல்கலைக்கழகங்களில் / கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI / Diploma / Nursing / Pharmacy தேர்ச்சி பெற்றவர்கள், முகாமில் கலந்து கொள்ள தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் / பல்கலைக்கழகங்களில் / கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Engineering / Graduation டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள், முகாமில் கலந்து கொள்ள தகுதியானவர்கள்.
  • இந்த முகாமில் முன் அனுபவம் உள்ள நபர்கள் மற்றும் முன் அனுபவம் இல்லாத நபர்களும் கலந்து கொண்டு பயனடையலாம்.
    Private Employment Camp வயது விவரம்:

    இந்த முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி தேவையான பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

    TN Jobs சம்பள விவரங்கள்:

    இந்த முகாமில் 400க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்களில் இருந்து 50,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதால், விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றார்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

    Private Employment Camp சிறப்பம்சங்கள்:

    அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்க்கான பதிவு வழிகாட்டுதல்கள். இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்.

    TN Jobs விண்ணப்ப கட்டணம்:

    இந்த முகாமில் கலந்து கொள்ள எந்த ஒரு விண்ணப்பக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

    தேர்வு முறை:

    இந்த முகாமில் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உடனே பணி நியமன ஆணை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    TN Jobs விண்ணப்பிக்கும் முறை:

    இந்த தனியார்துறை முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம். அல்லது அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள QR code ஐ ஸ்கேன் செய்து, பதிவுகளை எளிமையாக செய்து கொள்ளலாம். மேலும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 20.03.2022ம் தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 3.00 மணிக்குள் தவறாமல் கேட்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை கொண்டு சென்று முகாமில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Categories

Tech |