கிசான் கிரெடிட் கார்டு விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் கடன் அட்டை ஆகும். எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகள் இந்த கிரெடிட் கார்டுகளை விவசாயிகளுக்கு வழங்குகின்றன. அனைத்து விவசாயிகளும் இந்த கிரெடிட் கார்டு மூலமாக கடன்களை பெற முடியும். ரூ.3 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 2 சதவீத வட்டி சலுகை கிடைக்கிறது. உடனடியாக கடனை திருப்பி செலுத்துவதற்கு 3 சதவீத கூடுதல் வட்டி சலுகை கிடைக்கிறது. இதுபோன்று நிறைய வசதிகள் இதில் இருக்கிறது.
pm-kisan திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே-1 ஆம் தேதி வரை சிறப்பு கிராம சபைகள் நடத்தி கிசான் கிரெடிட் கார்டு இல்லாத விவசாயிகளிடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு அந்த வங்கிக் கிளைகளுக்கு கிசான் அனுப்பப்பட்டு வருகிறது. pm-கிஷன் திட்டத்தில் உள்ள விவசாயிகள் யாருக்காவது கிரெடிட் கார்டு இல்லை என்றால் அவர்கள் அந்தந்த வாங்கிக்கிளைக்கு தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
pm-kisan திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளியின் e-kyc விவரங்களை சரி பார்ப்பது அவசியமாகும். சமீபத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட இந்த வசதியானது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இதனை கட்டாயம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி உதவி கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.