Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மிஸ் யூ ஜடேஜா…. அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது… கவலையில் ரசிகர்கள்..!!

நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்காததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கெடு விதித்திருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே அணியை அறிவித்து விட்டன.. இந்த நிலையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) டி20 கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவித்தது.

இந்த அணியில் ஆசிய கோப்பை தொடரில் இடம் பிடித்த பெரும்பான்மையான வீரர்கள் இடம் பிடித்து இருக்கின்றனர். அதே சமயம் ஒரு சில மாற்றங்கள் மட்டும் நிகழ்ந்துள்ளது. அணியில் மிக முக்கிய மாற்றமாக வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் காயம் காரணமாக ஆசியக் கோப்பையில் இடம்பிடிக்காமல் இருந்த பும்ரா, ஹர்ஷல் பட்டேல் அணியில் இடம்பிடித்துள்ளனர்.. ஆனால் காயம் காரணமாக ஜடேஜா இடம்பிடிக்கவில்லை..

இதனால் ஜடேஜாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சோகமாக பதிவிட்டு வருகின்றனர். 2020ல் இருந்து இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களில் ஒருவரான ஜடேஜாவை ஆசிய கோப்பையில் தவறவிட்டோம். தற்போது டி20 உலகக்கோப்பையிலும் மிஸ் செய்வதாக குறிப்பிடும் ரசிகர்கள் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்றும், அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு பதிலாக மற்றொரு பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் படேல் அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக செப்டம்பர் 4 அன்று பாகிஸ்தானுடன் இந்தியா சூப்பர் 4சுற்றில் மோதுவதற்கு முன்னதாக, இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஜடேஜாவின் முழங்காலில் காயம் ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக, 2022 ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

ஜடேஜா இல்லாதது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பெரிய அடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜடேஜாவின் ராக்கெட் போன்ற நேரடி வீசுதல்கள், இடது கை சுழற்பந்து வீச்சு மற்றும் இடது கை பேட்டிங் ஆகியவை இந்திய அணி இழந்து விட்டது.

ஜடேஜாவின் ரன் 2022ல் இந்திய அணிக்கு மிக முக்கியமான வீரராக இருக்கிறார்.. பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் அவர் சீராக பந்துவீசியது இந்தியாவுக்கு வெற்றியில் பெரிதும் உதவியது. அவர் காயம் அடையும் வரை திடமான ஆசிய கோப்பை 2022 பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில், அவர் 35 ரன்கள் எடுத்தார் மற்றும் 2 ஓவர்களில் 0/11 என்ற எண்ணிக்கையை பதிவு செய்தார். ஹாங்காங்கிற்கு எதிரான அடுத்த போட்டியில், அவர் பேட்டிங் செய்யவில்லை, ஆனால் பந்தில் 1/15 எடுத்து நன்றாக பீல்டிங் செய்தார்.

ஜடேஜா 2022 ஆம் ஆண்டில் இதுவரை பேட் மற்றும் பந்து இரண்டிலும் சிறப்பாக ஆடியுள்ளார்.. இந்த ஆண்டு 9 டி20 போட்டிகளில், ஜடேஜா 8 இன்னிங்ஸ்களில் 50.25 சராசரியில் 201 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த தனிநபர் ஸ்கோர் இந்த ஆண்டில் 46* ஆகும். இது தவிர, அவர் 1/15 என்ற சிறந்த எண்ணிக்கையுடன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

https://twitter.com/Goutham73312783/status/1569316088600723459

இதற்கிடையில், ஜடேஜா செப்டம்பர் 6 அன்று இன்ஸ்டாகிராமில் தனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருப்பதாகவும், விரைவில் மறுவாழ்வு தொடங்கும் என்றும் அறிவித்தார். அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பிசிசிஐ, எனது அணியினர், துணை ஊழியர்கள், பிசியோக்கள், மருத்துவர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நான் விரைவில் எனது மறுவாழ்வைத் தொடங்கி, என்னால் முடிந்தவரை விரைவில் திரும்ப முயற்சிப்பேன். உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி” என்று ஜடேஜா ஒரு பதிவில் தெரிவித்திருந்தார்.

ஆசியக்கோப்பை தொடருக்கிடையே விடுமுறை தினத்தில் ஸ்கை போர்டை வைத்து ஜடேஜா விளையாடியுள்ளார். அப்போது அவருக்கு முழங்காலில் ஏற்கனவே அடிபட்ட இடத்தில் மறுபடியும் அடிப்பட்டதால் தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.. இதற்கு பிசிசிஐ அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

Categories

Tech |