Categories
தேசிய செய்திகள்

மீசை பற்றி பேசிய தலித் இளைஞர்?…. 2 பேரின் வெறிச்செயல்….. பெரும் பரபரப்பு….!!!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பர்வா கிராமத்தில் ஜிதேந்திர பால் என்பவர் வசித்து வந்தார். இவர் சுகாதார உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பருடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக எதிரே வந்த 2 பேர் டூவீலரில் வாகனத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். வாகனத்தை தடுத்து நிறுத்திய பின் திடீரென அந்த 2 பேரும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜிதேந்திரபாலை சரமாரியாக குத்தி ரத்தவெள்ளத்தில் சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஜிதேந்திரபாலை உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

ஆனால் ஜிதேந்திர பால் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து அவரது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து காவல்த்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சூரஜ் சிங், ரமேஷ் சிங் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக ஜிதேந்திரபால் தரப்பினர் கூறியதாவது, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜிதேந்திர பால் மீசை வைப்பது குறித்து தொடர்ந்து தன் சமூக வலைத்தளத்தில் கூறி வந்தார். இதன் காரணமாக வெறுப்படைந்து தான் அவரை குத்தி கொலை செய்திருக்கிறார்கள் என்று கூறுகின்றனர். ஆனால் காவல்துறையினர் இதனை ஏற்க மறுக்கின்றனர்.

Categories

Tech |