ஆப்கான் நாடு முழுவதுமாக தாலிபான்களின் பிடியில் வந்ததுள்ளது. இதனால் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அங்குள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களும், அந்நாட்டு மக்களும் தப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொண்ட உக்ரேனியர்களை மீட்க வந்த விமானம் கடத்தப்பட்டுள்ளதாக உக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் யெவ் கனி யெனின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறு அன்று உக்ரேனை சேர்ந்த மக்களை மீட்க வந்த விமானம் ஆயுதம் தாங்கிய நபர்களால் கடத்தப்பட்டு சிலரை ஏற்றிக்கொண்டு ஈரானுக்குள் நுழைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் தங்கள் நாட்டுக்குள் கடத்தல் விமானம் வரவில்லை என்று ஈரான் மறுத்துள்ளது.