ஸ்பெயினின் மெட்ரிக் நகரில் 30 நாடுகளைக் கொண்ட நோட்டா அமைப்பின் மாநாடு நடந்து வருகிறது. இதில் அமெரிக்க ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் நோட்டா உறுப்பு நாடுகளுக்கு ரஷ்யா நேரடி அச்சுறுத்தலாக திகழ்கிறது என்று பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து வருவதால், உக்கரையனுக்கு அரசியல் ரீதியாகவும் செயல் ரீதியாகவும் அழித்து வரும் உதவிகள் அதிகரிக்க நோட்டா நாடுகளின் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியது, நோட்டா அமைப்பு வலுவானது மற்றும் ஒன்று பட்டது. உச்சி மாநாட்டில் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் எங்களின் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்கப் போகிறோம். போலந்தில் நிரந்தர ராணுவ தலைமையகத்தை அமெரிக்க அமைக்க உள்ளது. இதனை தொடர்ந்து புதிய அமெரிக்க போர்க்கப்பல்கள் ஸ்பெயினுக்கும், போர் விமானங்கள் இங்கிலாந்துக்கும், தரை படைகள் ரூமினியாக்கும் அனுப்பப்படும். அது மட்டுமில்லாமல் கிழக்கு பகுதி முழுவதும் அமெரிக்கா நோட் அமைப்பின் வலுப்படுத்த உள்ளோம். பால்டிக் பிராந்தியத்திற்கு சுழற்சி முறையில் வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.