கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவி வந்ததன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் 9 முதல் 12 மாணவர்கள் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் திருச்சி சேதுராபட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 14 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
இந்த 14 மாணவர்கள் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் என்பதால் அவர்களை அங்கேயே தனிமைப்படுத்தி சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து மாணவர்களுடன் பழகிய சக மாணவர்களுக்கும் பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.