Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் அட்லீயுடன் இணையும் ஜெய்?… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் அட்லீ அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் ஜெய் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதையடுத்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார் . தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . இயக்குனர் அட்லீ படங்களை இயக்குவது மட்டுமல்லாது தனது மனைவி பிரியாவுடன் இணைந்து படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் .

Triples Jai: It is time for me to return to my Subramaniapuram days- Cinema  express

இதுவரை இவர்கள் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அட்லீ அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஜெய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |