Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் அட்லீயுடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்… வெளியான புதிய தகவல்…!!!

அட்லீ- ஷாருக்கான் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதை தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

AR Rahman to compose music for Shah Rukh Khan - Atlee film? - Tamil News -  IndiaGlitz.com

இந்நிலையில் அட்லீ- ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அட்லீயின் மெர்சல், பிகில் ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |