இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டுமே 331 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து வருவதால் டெல்லி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஒமைக்ரான் பரவல் காரணமாக இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.