Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. பள்ளிகள் அனைத்தும் மூடல்?….. அரசுக்கு கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் ஒவ்வொரு மாநிலங்களிலும் கடந்த ஆண்டு படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் பள்ளிகளை மூட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிகளில் மாணவர்கள் முக கவசம் அணிதல்,சனிடைசர் பயன்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு தொற்று உறுதியானது பள்ளி நிர்வாகத்துக்கு தெரியவந்தால், உடனடியாக கல்வி இயக்குனரகத்தில் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. எனவே விரைவில் பள்ளிகள் மூடுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |