கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும், முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரபிரதேசம், அரியானா, மராட்டியம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச அரசிற்க்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக அந்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், கொரோனா அதிகரித்து வருவதால் பரிசோதனைகள், தடுப்பூசி செலுத்துதல் போன்ற பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளது. மேலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு படிப்படியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.