சீனாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூடவும் விமானங்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் சீனாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. இதில் சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து சீனாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால் நாடு முழுவதும் மின்தடை அதிகரித்துள்ளது. இதனால் மங்கோலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவில் தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.
மேலும் கொரானா வைரஸ் பரவி உள்ள லான்சோ நகரில் இருந்து பிற மகாணங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பிற மாகாணங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லேன்சோ மற்றும் ஜியோன் ஆகிய பகுதிகளில் பரிசோதனை நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனா அரசு சுற்றுலாத் தலங்களை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் தற்போது இரண்டாவது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்துள்ளது என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.