Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மீண்டும் அதிகரித்து வருகிறது… ஒரே வாரத்தில் இவ்ளோ பேர் பாதிப்பு… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் கொரானா வேகமெடுத்து பரவி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தினமும் 15 முதல் 25 பேர் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 13 பெண்கள் உட்பட 50 பேர் நேற்று முன்தினம் ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருக்கும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 955 உயர்வடைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்ற 11 ஆயிரத்து 558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

 

 

Categories

Tech |