Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மீண்டும் அதிகரித்து வருகிறது… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… திண்டுக்கல்லில் கோரத்தாண்டவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் 41 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 14 ஆக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது. கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்றவர்களின் இதுவரை 11,613 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |