Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மீண்டும் அதிகரித்து வருகிறது… முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக… தடுப்பு பணிகள் தீவிரம்..!!

கொரோனா பரவலை தடுக்க தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு பணி நடைபெற்றது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அக்ரஹாரம், தலைஞாயிறு, சின்னக்கடை தெரு, கடை வீதி, ஆட்டோ நிறுத்தம், வேன் மார்க்கெட், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளித்து பணி நடைபெற்றது.

மேலும் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ஒரு ரூ. 200 அபராதம் விதிக்கப்படுகிறது. பேரூராட்சி சார்பில் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த பணியில் எழுத்தர் குமார், செயல் அலுவலர் பிரகாஷ், ஊழியர்கள் அன்பு, கொளஞ்சி ராஜன், ஜெய்ச்சந்திரன், மணிவண்ணன், முருகானந்தம் ஆகியோர் ஈடுபட்டனர்.

Categories

Tech |