அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் .
அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த பொது குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர்ந்திட கடுமையாக உழைப்பேன்.எப்போதும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என ஜெயலலிதா கூறியது செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதிமுகவின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நல்வாழ்வுக்கும் வாழ்நாள் முழுவதும் உழைப்பேன் . சாதி, மத பேதமின்றி, விருப்பு வெறுப்புகளுக்கு இடமின்றி உழைப்பேன் .இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன்” எனவும் தெரிவித்துள்ளார்.