சீனாவில் உள்ள சாயோயாங் மாவட்டத்தில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பீஜிங் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பள்ளியில் நேரடி வகுப்புகளை ரத்து செய்ததோடு, கொரோனா பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் பீஜிங்கில் பொதுமக்கள் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் சீனாவின் பிரதான பகுதியில் கொரோனா பாதிப்பு 24,326 பேருக்கு உறுதியாகியுள்ளது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு தொற்று அறிகுறிகள் இல்லை. சீனாவின் பொருளாதார தலைநகராக விளங்கும் ஷாங்காய் நகரில் ஒரே நாளில் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.