நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து வருகிறது. ஏற்கனவே தஞ்சையில் 206 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது. பின்னர் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் உறுதியானது. இதையடுத்து மீண்டும் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மேலும் 15 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.