Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதே கோஷம்…. ”சிக்கிய மற்றொரு மாணவி”….. பெங்களுருவில் பரபரப்பு …!!

பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக் கோஷமிட்ட அமுல்யாவிற்கு எதிராக பெங்களுருவில் நடந்த போராட்டத்தில் மற்றொரு மாணவியும் அதே கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று AIMIM கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் AIMIM கட்சி தலைவர் ஒவைசி பங்கேற்றார்.அப்போது மேடையில் பேசுவதற்காக வந்த அமுல்யா என்ற மாணவி ஒருவர் மேடையில் ஏறியதும் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டார். இது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மாணவி மீது 124ஏ பிரிவின் கீழ்  தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து இன்று பெங்களூருவில் உள்ள டவுன்ஹால் பகுதியில் அமுல்யா கூறிய கருத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து , அமுல்யா படத்தை கிழித்து தீயிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்து அமைப்பினர் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு மாணவி ஒருவர் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனக் கத்தி கோஷமிட்டுள்ளார். இதனால் பரப்பாகிய அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் கோஷமிட்ட மற்றொரு மாணவியை கைது செய்தனர். மேலும் அந்த மாணவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |