Categories
அரசியல்

மீண்டும் அப்படி நடக்குமாம்… சீமான் சொல்லுறாரு விடாதீங்க… காங்கிரஸ் பரபரப்பு புகார் …!!

சீமானை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் டிஜியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்த்தில் தொடர்ந்து வன்முறையையும், பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு சீமானும், அவர் கட்சியில் அவரால் ஏவிவிடப்பட்டவர்களும் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் மனித வெடிகுண்டுகள் படுகொலை நடக்கும் என்பது போலவும்,

அப்படி மனித வெடிகுண்டு படுகொலை நிகழ்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது போலவும் துரைமுருகன் என்பவர் சீமான் அவர்கள் முன்னிலையில் பேசியுள்ளார்.இது வந்து சீமான் அவர்களுடைய ஒப்புதலுடன் தான் இந்த பேச்சு நடைபெற்றுள்ளது, அவருடைய தூண்டுதலின் பேரில்தான் இந்த பேச்சு நடந்திருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

அதனால் திரு சீமான் அவர்களை பயங்கரவாத தடை சட்டம் U.A.P கீழ் கைது செய்ய வேண்டுமென்று டிஜிபியிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்கள் புகார் கொடுத்துள்ளோம். அரசியல் என்பது மக்களை குறிப்பாக இளைஞர்களை நல்வழிப்படுத்துவதாக இருக்க வேண்டும். நாம்  சார்ந்து இருக்கின்ற மண்ணுக்கு அமைதியையும், வளத்தையும், அன்பையும் தருவதாக இருக்க வேண்டும். ஆனால் இதற்கு நேர் மாறாக சீமானுடைய அரசியல் பயங்கரவாதத்தையும், படுகொலைகளையும் ஆதரிப்பதாகவும், முன் நிறுத்துவதாகவும் இருக்கிறது என தெரிவித்தார்.

 

Categories

Tech |