கடந்த சில நாட்களாக அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா நான்காவது அலை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியாவில் உச்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் “ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட வாய்ப்பில்லை. கொரோனா நிலவரம் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக” தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.