Categories
மாநில செய்திகள்

மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்?….. முதல்வர் நடத்தும் ஆலோசனை….. வெளியாக இருக்கும் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்றுநோய் காரணமாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூன்றாம் அலை முடிவுக்கு வந்த பின்னர் பாதிப்பு குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்த நிலையில், தற்போது திடீரென்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தினசரி பாதிப்பு 100 க்கு கீழ் வந்த நிலையில், நேற்று மட்டும் 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் தொற்று குறித்து  முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |