Categories
உலக செய்திகள்

“மீண்டும் அரசியலில் வருவது பற்றி அவர் நினைத்துக் கூட பார்க்க கூடாது”…எச்சரிக்கை விடுக்கும் கட்சித் தலைவர்…!!!!!

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பம் தான் காரணம் என கருதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும் நிதி மந்திரியாக இருந்த பசு ராஜபக்சேவும் பதவி விலகி உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்துள்ளனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறியுள்ளார். மேலும் ஜூலை 13ஆம் தேதி அவர் மாலத்தீவுக்கு தப்பி சென்றுள்ளார் மறுநாள் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் அங்கு நான்கு வாரங்கள் தங்கிய பிறகு தாய்லாந்து சென்றுள்ளார். தனது குடும்பத்தினர் தங்கியிருக்கும் அமெரிக்காவிற்கு செல்ல அவர் விரும்பியுள்ளார். ஆனால் அவருக்கு அங்கே விசா கிடைக்கவில்லை. இதனால் கடந்த மூன்றாம் தேதி இலங்கை திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் புதிய லங்கா விடுதலை கட்சி எனும் அரசியல் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா வில் நடைபெற்று உள்ளது. அதில் அந்த கட்சி தலைவர் குமார வெல்காமா பேசியபோது, கோத்தபய ராஜபக்சேவுக்கு அரசியல் அறிவு கிடையாது அரசியலை அரசியல்வாதிகளிடமே விட்டுவிட வேண்டும். ஆனால் அவர் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதே அவர் அரசியலுக்கு நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன் நாம் கணித்தது சரியானது தான் என்பதை கடந்த இரண்டு வருட கால நிகழ்வுகள் நிரூபித்துவிட்டது. மேலும் அவர் அரசியலில் மீண்டும் நுழையப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவது பற்றி அவர் நினைத்து கூட பார்க்க கூடாது என நான் சொல்லிக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |