மீண்டும் விடுப்புடன் கூடிய பயண செலவு சலுகை தமிழக அரசு ஊழியர்களுக்கான செலவின கட்டுப்பாடுகள் தளர்வு அரசாணை வெளியீடு .
கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கான விடுப்புடன் கூடிய பயண சலுகை, அலுவலக செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கான செலவின கட்டுப்பாட்டுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2020- 21 பயணச் செலவு மற்றும் தின படிகளுக்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகின்றன.
தவிர்க்க முடியாத பயணங்களுக்கான செலவு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. அதிகாரிகள் மாநிலங்களுக்குள் விமானத்தில் சிக்கன வகுப்பில் செல்லலாம். பணியிட மாற்றத்திற்கான செலவினம் குறைக்கப்பட்டது தொடர்கிறது. விடுப்புடன் கூடிய பயணச்சலுகை மீண்டும் வழங்கப்படுகிறது.