தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவார் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் இரட்டை வேட்டியத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதனையடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சமுத்திரகனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தாத் ராகுல் ப்ரீதி சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து அனிருத் இசையமைக்கிறார்.
அதனை தொடர்ந்து சமீபத்தில் சங்கர், இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது என்று கமல் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனுடன் சில புகைப்படங்கள், வீடியோ ஒன்றை இணைத்துள்ளார். இதனை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
#Indian2 from today.
@Udhaystalin @shankarshanmugh @LycaProductions @RedGiantMovies_ pic.twitter.com/TsI4LR6caE— Kamal Haasan (@ikamalhaasan) September 22, 2022