Categories
உலக செய்திகள்

மீண்டும் இணைந்தது அமெரிக்கா… உலக நாடுகள் பாராட்டு…!!!

சுற்று சூழலை பாதுகாப்பதற்கான பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளதால் உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகிறது.

உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்து வருகின்றன. அதற்காக பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த கூட்டணி போது எட்டப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா முதலில் இணைந்தது. ஆனால் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விலகப் போவதாக அறிவித்துள்ளது. வளரும் நாடுகள் அனைத்திற்கும் ஆதரவாக இந்த ஒப்பந்தம் இருப்பதாக விமர்சித்து வந்த டிரம்ப், பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று கூறினார். அதன்படி அவர் பொறுப்பேற்ற சில மணி நேரத்தில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அறிவித்தார். இந்நிலையில் அமெரிக்கா மீண்டும் அதிகாரப்பூர்வமாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. அதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |