Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் சிம்ரன் பிரசாத்…. இது ஒரு மைல்கல்….எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

சிம்ரன் மற்றும் பிரசாந்த் மீண்டும் இணைந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது 

இந்தியில்  வெளியான அந்தாதூன் படம்  தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.  இந்தியில் தபு கதாநாயகியாக நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் தமிழில் சிம்ரன் நடிக்கவுள்ளார் . இந்த ரீமேக் உரிமத்தை தியாகராஜா அவர்கள் வாங்கியிருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகனாக பிரசாந்த் நடிக்கிறார். ஜே.ஜே பிரட்டரிக்  இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில்  சிம்ரன் நடிப்பது மட்டுமல்லாமல் , பிரசாந்த்துடன் இணைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இதுக்குறித்து சிம்ரன் கூறுவது, “இந்திய சினிமாவில் அந்தாதூன் படம் ஒரு மைல்கல் படம். தபு பாத்திரத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு மட்டுமன்று, பிரசாந்துடன் மீண்டும் நடிப்பது  எனக்கு மகிழ்ச்சி” என கூறினார்.

Categories

Tech |