நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் . இவர் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதையடுத்து சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள ‘பத்து தல’ படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான இந்த படம் மற்றும் பாடல்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது . மீண்டும் ஏ.ஆர்.ரகுமான் சிம்பு கூட்டணி இணைய உள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .