Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மீண்டும்…. இந்தியா vs பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்?….. நடத்த தயாரான இங்கிலாந்து….. பிசிசிஐ அளித்த விளக்கம்..!!

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் நடத்தும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முறைசாரா திட்டத்தை பிசிசிஐ நிராகரித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடருக்கான நீண்ட காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக,இரு அணிகளுக்குமிடையே ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) முன்வந்துள்ளது. ஆனால் வணிக நோக்கத்திற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த வாய்ப்பை வழங்கினாலும் எதிர்காலத்தில் இந்திய-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்களுக்கான வாய்ப்புகள் “பூஜ்ஜியத்திற்கும் குறைவாக உள்ளன என பிசிசிஐ மறுத்துள்ளது.

தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்று 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.. இந்த தொடருக்கிடையே இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) துணைத் தலைவரான மார்ட்டின் டார்லோ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவிடம், இங்கிலாந்தில் வைத்து இந்தியா vs பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்தும் யோசனையை முன்வைத்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது..

கடந்த ஆண்டு பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட 2 போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து இங்கிலாந்து கடைசி நிமிடத்தில் வெளியேறிய பிறகு, பாகிஸ்தான் உடனான உறவுகளை சரிசெய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மேற்கொண்ட முயற்சியாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது, “முதலில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்தியா – பாகிஸ்தான் தொடர் பற்றி பாகிஸ்தானிடம் பேசியது, அது சற்று வித்தியாசமானது. எப்படியிருந்தாலும், பாகிஸ்தான் அணிக்கு  எதிரான தொடர் என்பது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவெடுக்கும் விஷயம் அல்ல, ஆனால் அது அரசாங்கத்தின் முடிவு. தற்போது வரை, நிலைப்பாடு அப்படியே உள்ளது. நாங்கள் பாகிஸ்தானுடன் பல அணிகள் பங்கேற்கும் நிகழ்வுகளில் மட்டுமே விளையாடுகிறோம், ”என்று இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்கினார்..

இரு நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை மற்றும் அரசியல் சார்ந்த பிரச்சனை போன்ற காரணங்களுக்காக பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களுக்குள் இருதரப்பு தொடர்களை விளையாடாமல் இருக்கிறது.. பாகிஸ்தான் மீதான இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் காரணமாக, பிசிசிஐ பாக்., கிரிக்கெட் வாரியத்துடன் (பிசிபி) கிரிக்கெட் உறவில் ஈடுபட விரும்பவில்லை..

ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை உட்பட பல அணிகள் கொண்ட போட்டிகளைத் தவிர, இந்தியாவும் பாகிஸ்தானும் ஜனவரி 2013 முதல் எந்த வடிவத்திலும் இருதரப்பு தொடர்களில் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடவில்லை.. மேலும் அவர்களின் கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 2007 இல் விளையாடப்பட்டது. அதன்பின் இரு தரப்பு தொடர் எதுவுமே நடைபெறவில்லை..

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை 2022 இல் இரு நாடுகளும் நேருக்கு நேர் மோதின மற்றும் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் 2022 ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் விளையாட இருக்கின்றன. இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிகப்பெரிய போட்டியாக உள்ளது, இதனால் பெரும் ஸ்பான்சர்ஷிப் வருவாய் மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர்களை ஈர்க்கிறது. 2011 உலகக் கோப்பை அரையிறுதியை டிவியில் 495 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |