ரயில் பயணிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று மீண்டும் சென்னையில் இருந்து திருப்பதிக்கு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து திருப்பதிக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இந்த மனு குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரயில் நீடிப்பு செய்யப்படும், சென்னை-திருப்பதி இடையே முன்பதிவு இல்லா விரைவு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த ரயில் சென்னையிலிருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு பெரம்பலூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், திருநின்றவூர், திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு, அரக்கோணம், திருத்தணி, ஏகாம்பரகுப்பம், புத்தூர், ரேணிகுண்டா ஆகிய நிலையங்களில் நின்று பிற்பகல் திருப்பதியை சென்றடையும். பின்னர் அங்கிருந்து பிற்பகல் புறப்பட்டு சென்னையை மாலை 5. 15 மணிக்கு வந்தடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.