திருவனந்தபுரம்-மும்பை வாராந்திர ரயில் பற்றி சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திருவனந்தபுரம் -மும்பை இடையேயான வாராந்திர ரயில் (ரயில் எண் 16332) தற்போது மீண்டும் இயக்கப்பட இருக்கின்றது. இந்த ரயிலானது வருகின்ற 21-ஆம் தேதி காலை 4.25 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறு நாள் இரவு 7.15 மணிக்கு மும்பை ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது மதியம் 01.05 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்திற்கும் 01.20 மணிக்கு கோவைக்கும் 2.10 மணிக்கு திருப்பூருக்கும் 03.00 மணிக்கு ஈரோட்டுக்கும் 4.10 மணிக்கு சேலத்துக்கும் 5.35 மணிக்கு திருப்பத்தூருக்கும் சென்றடையும்.
இதுபோலவே மும்பை திருவனந்தபுரம் வாராந்திர ரயிலானது (ரயில் எண் 16331) 24 ஆம் தேதி இரவு 8.35 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு காலை 8:00 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். திங்கட்கிழமை இரவு 7.15 மணிக்கு திருப்பத்தூருக்கும் 8.45 மணிக்கு சேலத்துக்கும் 9.45 க்கு ஈரோட்டுக்கும் 10.30 திருப்பூருக்கும் 11.30 கோவைக்கும் 11.55 க்கு போத்தனூருக்கும் சென்றடையும். இவ்வாறு சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.