Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் உடல் எடை கூடி குண்டாக மாறிய லட்சுமி மேனன்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை லட்சுமி மேனனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகை லட்சுமி மேனன் கும்கி, சுந்தரபாண்டியன், நான் சிகப்பு மனிதன், மிருதன், வேதாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து இவர் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் . மேலும் லட்சுமி மேனன் உடல் எடை கூடி குண்டாக மாறிய புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதன்பின்பு இவர் உடல் எடையை குறைத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

சமீபத்தில் இவர் நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த புலிகுத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் லட்சுமி மேனன் மீண்டும் உடல் எடை கூடி குண்டாக மாறிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

Categories

Tech |