சூரரை போற்று படத்தை தொடர்ந்து அடுத்து சூர்யா நடிக்கும் படம் குறித்து இயக்குனர் சுதா கொங்கரா கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான சூர்யா அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றி படங்களாக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படமும் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட நிலையில் அதுவும் மக்களிடையே நல்ல ரீச்சை பெற்றது.
இந்நிலையில் பாலாவின் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். இப்படம் பற்றி இயக்குனர் சுதா கொங்கரா அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, “பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருக்கின்றது. மேலும் சூரரைப்போற்று திரைப்படத்தைப் போலவே பயோ பிக்காக இல்லாமல் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.