இந்தியாவில் வெங்காயத்தின் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல், சிலிண்டர் எரிவாயு மற்றும், காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் மகாராஷ்டிராவில் மீண்டும் பருவம் தவறி பெய்த மழையால் வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக வெங்காய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. தற்போது நாசி சந்தையில் குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெங்காய வரத்து குறைவால் வரும் நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் செய்தி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.