Categories
தேசிய செய்திகள்

மீண்டும் உயர்கிறதா பெட்ரோல் – டீசல் விலை….? அச்சத்தில் வாகன ஓட்டிகள்….!!!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலராக உயர்ந்துள்ள போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சுமார் ஒரு மாதமாக உயர்த்தப்படவில்லை. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலை 20 முதல் 25 ரூபாய் அளவிற்கும் டீசலை 14 முதல் 18 ரூபாய் அளவிற்கும் குறைவாக விற்க வேண்டியுள்ளதாக தனியார் பங்குகள் தெரிவித்துள்ளன. இது குறித்து இந்திய பெட்ரோலியத் துறை கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதில் பெட்ரோலிய பொருள் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரிக்கட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் மேற்கொண்டு புதிய முதலீடுகளுக்கு வாய்ப்பிருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயரும் அச்சம் எழுந்துள்ளது.

Categories

Tech |