Categories
மாநில செய்திகள்

“மீண்டும் உயர்ந்த‌ தக்காளி விலை”…… இல்லத்தரசிகளுக்கு ஷாக்….!!!!

மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால் ஈரோட்டில் மீதும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. ஈரோடு வ உ சி மார்கெட்டில் தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம் தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் வந்த வண்ணம் இருந்தது. தினமும் 15 டன் தக்காளி லோடு வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் சமீபகாலமாக மழை காரணமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையில் இருந்து வருகின்றது.

நேற்றுவரை வஉசி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 35 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இன்று  10 டன் தக்காளி மட்டும் வரத்தாகி உள்ளன. நேற்றைவிட இன்று வரத்து குறைந்ததால் தக்காளி விலையும் அதிகரித்தது. இன்று சுமாரான தக்காளி ஒரு கிலோ ரூ.45 -க்கும் நல்ல தக்காளி ஒரு கிலோ ரூ.50 -க்கும் விற்பனையானது.

Categories

Tech |