கரூர் மாவட்டத்தில் ஆறு மாதங்களுக்கு பிறகு உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கரூரில் செயல்பட்டு வந்த கரூர், வெங்கமேடு, வேலாயுதபாளையம் மற்றும் பல்லபட்டி ஆகிய நான்கு உழவர் சந்தை கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. இதையடுத்து தற்காலிக காய்கறி சந்தை செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் உழவர் சந்தையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கரூர், வெங்கமேடு, வேலாயுதபாளையம் மற்றும் பல்லப்பட்டி ஆகிய இடங்களில் இன்று காலை முதல் உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. உழவர் சந்தைக்கு வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்த பின்பும் வெப்பமானி பரிசோதனை செய்யப்பட்டபின் சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.