நெல்சனின் வேட்டை மன்னன் திரைப்படம் மீண்டும் உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நெல்சன் தற்போது பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் ரிலீஸாக காத்திருக்கின்றது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் வேட்டை மன்னன் மீண்டும் உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சிம்பு நடித்த வேட்டை மன்னன் திரைப்படம் பாதியிலேயே நின்றது. இந்நிலையில் திரைப்படம் மீண்டும் உருவாக்குமா? என்ற கேள்விக்கு படத்தின் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி கூறியுள்ளதாவது நிறைய கமிட்மெண்ட்ஸ் இருந்தால் படம் நிறுத்தி வைக்கப்பட்டது. வேட்டை மன்னன் திரைப்படமானது கூடிய விரைவில் தொடங்க வாய்ப்புகள் இருக்கின்றது.
இத்திரைப்படத்தின் பாதி படப்பிடிப்பு ஜப்பானில் எடுக்கப்படவுள்ளது. இத்திரைப்படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கிடையில் சிம்பு வாலு திரைப்படத்தை நடித்தார். திரைப்படத்தை அவர் என்னையே தயாரிக்க வைத்தார். திரைப்படத்திற்கு பிறகு எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டதால் இப்படத்தை எடுக்க முடியவில்லை. நெல்சனும் தனக்கு அடுத்த பட வாய்ப்புகள் வருகின்றது பண்ணவா என்று கேட்டார். அதற்கு நானும் பண்ணுங்கள். எனக்கு தேவைப்படும் பொழுது கூறுகின்றேன் என்ன சொன்னேன். நான் சந்தித்த இயக்குனர்களிலேயே நெல்சன் தான் ஒரு நல்ல இயக்குனர். தயாரிப்பாளர்கள் முன்னணி நடிகர்களை படங்களை மட்டுமே தயாரிக்கின்றனர் கதையை வைத்து படங்களில் தேர்வு செய்வதில்லை என்று கூறியுள்ளார்.