கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் என்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், குமரி மாவட்டத்தில் மருத்துவத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் கருவிகள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் குறைந்து வந்த நிலையில் குரங்கு அம்மை என்ற புதிய வைரஸ் உலக நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே இந்த நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களை கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளோம். மேலும் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணித்து அவர்களது முகங்கள், உடல்களிலும் மாற்றம் தெரிந்தால் அவர்களை சோதனைக்கு உட்படுத்தி அதை புனேவில் உள்ள ஆய்வகதிற்கு அனுப்ப துறையின் செயலாளர் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதி உள்ளார். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.